“பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திருமணமா? – மாப்பிள்ளை யார் தெரியுமா? – கமுக்கமாக நடந்த நிச்சயதார்த்தம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திருமணமா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாரதி கண்ணம்மா.   இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். மேலும் இந்த தொடரில் ஹீரோயினுக்கு தங்கச்சியாகவும், வில்லியாகவும் நடித்து வரவேற்பை பெற்றவர் தான்  நடிகை கண்மணி மனோகரன்.

இந்த சீரியலை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான “அமுதாவும் அன்னலட்சுமியும்” என்ற சீரியலிலும் நடித்தார். அதுவும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. இப்படி சீரியல் பக்கம் ரொம்ப பிசியாக இருந்து வந்த கண்மணி குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Also read: விஜய் டிவியின் History record யை பிரேக் செய்த பிரபல சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து!!

அதாவது சீரியல் நடிகை கண்மணி மனோகரன் அஷ்வத் என்பவருடன் கமுக்கமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். யாருக்கும் தெரியாமல் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் உறவினர், பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடி என்று கூறி வருகின்றனர். 

Leave a Comment