தனுஷின் “கர்ணன்” பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும் – மாப்பிள்ளை இந்த பிரபலமா?

தனுஷின் “கர்ணன்” பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்1 நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கர்ணன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெயர் போனவர் தான்  ரஜிஷா விஜயன்.

அப்படத்தில் அவரின் நடிப்பு அதிகமாக பேசப்பட்ட நிலையில், சூர்யாவின் ஜெய்பீம், கார்த்தியின் சர்தார் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். தற்போது மலையாள படங்களில் பிசியாக இருந்து வருகிறார். நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது.

தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுக்கப்பட்ட போட்டோக்களை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் ரஜிஷா – டோபின் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை – அட இவங்கள – இதை யாருமே எதிர்பார்க்கலயே!

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இதற்கான அறிவிப்பை ரஜிஷா – டாபின் ஜோடி விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

  1. tamil cinema news 2024 ↩︎

Leave a Comment