சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் – சுமார் 1.6 லட்சத்திற்கு விற்பனை என தகவல் !

தற்போது பறவையின் கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப் குறித்து காண்போம், மேலும் இந்த சூப்பில் அதிகளவு மருத்துவ குணங்கள் இருப்பதாக சீன மக்களால் நம்பப்படுகிறது.

வித்தியாசமான உணவுகளை உண்பதில் சீனர்களை அடித்துக்கொள்ள முடியாது. பாம்பு, தவளை, பூச்சிகளை போன்றவற்றை உணவில் பயன்படுத்தும் சீன மக்கள் ஒருபடி மேலே போய் தற்போது பறவையின் எச்சம் நிறைந்த கூட்டை வைத்து தயாரிக்கப்படும் சூப்பை சுவைக்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூப்பை அருந்துவதன் மூலம் சரும பாதுகாப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும், அத்துடன் வயதான தோற்றத்தை கட்டுப்படுத்த உதவும் என சீன பாரம்பரிய மருத்துவ குறிப்புகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

First Night-ல் இருந்து வீடியோ வெளியிட்ட புது தம்பதி – சோசியல் மீடியாவை கலக்கும் video!!

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தின் ஆதிக்கத்தால் பறவை எச்சில் சூப், தற்போது உலகம் முழுவதும் அறியப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதனையடுத்து 500 கிராம் உலர்ந்த பறவை கூட்டின் விலை ரூபாய் 1.6 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Comment