ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு – காலையிலேயே இப்படி ஒரு சோகமா?

Bus Accident: ஆக்ராவில் பேருந்து லாரி மோதி கோர விபத்து: சோசியல் மீடியா பக்கம் போனால் போதும் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, விபத்து என போன்ற கொடூர சம்பவங்கள் அதிகமாக பரவி வருகிறது. இவற்றையெல்லாம் தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. குறிப்பாக தினசரி இரண்டுக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் இப்பொழுது உத்திரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா நகரின் அருகே ஒரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பீகாரின் சீதார்மஹியில் இருந்து காலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறமாக பால் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி மீது அந்த தனியார் பேருந்து மோதி வித்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 19 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்ப இடத்திற்கு வந்து பேருந்தில் சிக்கி கொண்ட நபர்களை கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (11.07.2024) ! வரும் வியாழன் கிழமை பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் !

காலையிலே இப்படி ஒரு துயர சம்பவம் நிகழும் என்று அந்த பேருந்தில் வந்த பயணிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இறந்த பயணிகளின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Comment