நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை !

தற்போது நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதனை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்தினம் திரைபடம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் விஷாலின் அடுத்தப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. tamil cinema news 2024

இந்நிலையில் நடிகர் விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்து ஆலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ராயனாக ஜெயிச்சாரா? இல்லையா?  படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!!!

அந்த வகையில் கடந்த 2017 முதல் 2019 வரை தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Comment