பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா ? – புதிய படத்தின் கம்பேக் மூலம் ட்ரோல்களுக்கு பதிலடி – ரசிகர்கள் கருத்து !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் ராசியில்லாத நடிகையா ? என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய படத்தின் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் கருத்து.

செய்தி வாசிப்பாளராக தொடங்கி, சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களில் இவருக்கு ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம் என்றால் அது திருச்சிற்றம்பலம் மற்றும் யானை ஆகிய படங்களை சொல்லலாம். இதனையடுத்து அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே அவ்வளவு பெரிய வெற்றிப்படங்களாக அமையவில்லை.

குறிப்பாக பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன், அகிலன், பொம்மை, பத்து தல, ரத்தினம், இந்தியன் 2, ஆகிய படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அத்துடன் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போதிலும் படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவர் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை என்ற காரணத்தால் நடிகை பிரியா பவானி சங்கரை ராசியில்லாத ஹீரோயின் என்றும்,

அவர் சமீப காலங்களில் நடித்த படங்கள் எல்லாம் படுதோல்வி அடைந்துள்ளது என்று விமர்சித்து வருகிறார்கள்.

அத்துடன் அவர் அந்த படங்களில் நடித்ததால் தான் படம் தோல்வி அடைந்துள்ளது என்பது போலவே பலரும் பிரியா பவானி சங்கரை இணையத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் நல்ல படம் ஒன்றில் நடித்து கம்பேக் கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

மேலும் பிரியா பவானி சங்கர் தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

எனவே இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பெரிய அளவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

Leave a Comment