சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024 ! வேலையில்லா பட்டதாரிகளே ஜாப்ஸ் முகாம் உங்களுக்குத்தான் !
எம்பிளாய்மென்ட் அலுவலகம் நடத்தும் சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024. வேலை தேடும் இளைஞர்கள் பயன்படும் வகையில் வரும் 09.08.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்துகொள்ளலாம்.
சிவகங்கை மைக்ரோ வேலைவாய்ப்பு கண்காட்சி 2024
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுனர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தனியா நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
TMB வங்கி நிரந்திர ஆட்சேர்ப்பு 2024 ! பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
மேலும் இம்மு முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்ப படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிக்கும் படிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த விருப்பமுள்ள நபர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள தேவையான ஆவணங்கள் கீழ் வருமாறு
குடும்ப அட்டை
வேலை வாய்ப்பு அடையாள அட்டை
ஆதார் அட்டை
முகாமிற்கு வரும் நபர்கள் இந்த மூன்றும் கண்டிப்பாக கொண்டு வரவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | View |
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே வேலை தேடுபவர்கள் இம்மு முகாமில் கலந்துகொண்டு பயன்படலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஆஷா அஜித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2024