மருத்துவ படிப்புகளுக்கான நெக்ஸ்ட் தேர்வு நடப்பாண்டு முதல் அமல் – தேசிய மருத்துவ ஆணையம் தகவல் !

தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நெக்ஸ்ட் தேர்வு நடப்பாண்டு முதல் அமல் செய்யப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்ததுடன் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிக்க, ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைபோல, இளநிலை மருத்துவ படிப்பை முடித்த பின், முதுநிலை மருத்துவம் படிக்க வேண்டுமெனில் அதற்கான நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து, இந்தியாவில் பணியாற்ற வருவோர் அதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். Next exam for medical courses

இந்நிலையில் பயிற்சி மருத்துவர் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாட்டு மருத்துவ படிப்பை முடித்தோருக்கான தகுதி தேர்வு போன்றவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய தகுதி தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த தேசிய மருத்துவ ஆணையம் தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்கள் நெக்ஸ்ட் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும்.

அதன் பிறகு நெக்ஸ்ட் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேரவும், மருத்துவ பணிகளில் ஈடுபடவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. National Medical Commission

TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களும் இந்தியாவில் மருத்துவம் பார்க்க நெக்ஸ்ட் 2 தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த கல்வியாண்டில் அதை அமல்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்ததுடன் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

Leave a Comment