ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா – படக்குழு அறிவிப்பு !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் வேட்டையன் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் T.J.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’ தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் பட பிரபலம் மீது பாலியல் வழக்கு – அதிரடி புகார் கொடுத்த பெண் கலைஞர்!!

இதனை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் கடந்த செப்டம்பர் 9 அன்று வெளியானது. அத்துடன் அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Leave a Comment