விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு – திருமாவளவன் தகவல் !
வரும் அக்டோபர் 2 ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபிறகு விசிக தலைவர் திருமாவளவன் தகவல்.
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மது ஒழிப்பு மாநாடு :
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது விசிக மாநாட்டில் திமுக பங்கேற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் வரும் அக்டோபர் 2 ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு கலந்து கொள்ளுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
திருமாவளவன் சந்திப்பு :
முதல்வர் ஸ்டாலின் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தோம் என்றும், மேலும் பல்லாயிர கணக்கான முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க பயணம் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து திமுகவின் கொள்கையும் மதுவிலக்கு தான் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாகவும்,
மேலும் மது விலக்கில் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வரிடம் வழங்கினேன் என்ற தெரிவித்துள்ளார்.
பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி – அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?
திமுக கூட்டணி :
மேலும் திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, அத்துடன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனபது எங்களின் நீண்ட கால கோரிக்கை எனவும் முதல்வர் உடனான சந்திப்பிற்கும் தேர்தலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்ற விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக திருமாவளவனின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் சந்தித்த சம்பவம் தற்போது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது