சிறகடிக்க ஆசை சீரியல் அதிரடி சாதனை – விஜய் டிவி பதிவிட்ட போஸ்டர்!

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகளை கடந்து அதிரடி சாதனை படைத்துள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் அதிரடி சாதனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக TRP-யில் முதலிடத்தில் இருந்து வந்த தொடர் தான் சிறகடிக்க ஆசை.

விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் சமீபத்தில் நடந்த இந்த ஆண்டு பல விருதுகளை விஜய் தொலைக்காட்சி விருது விழாவில் அள்ளி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியலில் தற்போது மனோஜை லெட்டர் கொடுத்து மிரட்டும் அந்த மர்ம நபர் யார் என்று முத்து கண்டுபிடிப்பது பற்றி தான் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இதனால் வீட்டிற்குள் பெரும் பூகம்பம் வெடித்துவிட்டது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து அடுத்த வார எபிசோடில் தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலை வாழ்த்தி போஸ்ட் போட்டுள்ளது.

Also Read: CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி” –  ஹீரோயின் யார் தெரியுமா?

எதற்காக தெரியுமா?  சிறகடிக்க ஆசை தொடர் வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக தங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் தொலைக்காட்சி தனது சோசியல் மீடியா பக்கம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Comment