தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நவம்பர் 2ம் தேதி ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: தமிழ் சினிமாவில் தனது கெரியரை ஸ்டார்ட் பண்ணி தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது அவர் நடிப்பை தாண்டி படம் இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு
இதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லிக்கடை போன்ற படங்களை இயக்கி வருகிறார். இதற்கிடையில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து கேட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் மனுதாரர் இருவரும் நேரில் ஆஜராகாததால் வழக்கு விசாரணை இன்று (அக்.19ம் தேதிக்கு) ஒத்திவைக்கப்பட்டது.
சார் பட இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம் – ஒன்று கூடிய சொந்தங்கள்!
இந்நிலையில் இன்று விசாரணை நடந்த நிலையில் இன்றும் விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகாததால் விசாரணையை நவ.2ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் பிரியமாட்டார்கள் விரைவில் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?