தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு … சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டானா புயல் உருமாறி, வடக்கு ஒடிசா – மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்க கூடும்.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் சென்னை வானிலை மையம் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம் – 4 பேர் பலி – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

மேலும் இன்று தென்காசி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு 

2026 காமன்வெல்த் போட்டி 

Leave a Comment