சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம் –  தெறித்து ஓடிய ஊழியர்கள் – என்ன நடந்தது?

சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம்: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் கிட்டத்தட்ட 10 தளங்கள்  இருக்கிறது. அதில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தான் தமிழ்நாடு அரசை சேர்ந்த பல்வேறு அரசு துறைகள் இயங்கி வருகிறது. தினசரி பரபரப்பாக இருந்து வரும் இந்த தலைமைச் செயலக வளாகத்தில் இன்று இன்று(24.10.2024) காலை 11;30 மணியளவில் ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அதாவது, இன்று காலை 11;30 மணியளவில் கட்டிடத்தில் சத்தத்துடன் அதிர்வு கேட்டதாக கூறி தான் ஊழியர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இந்த தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

சென்னை தலைமை செயலகத்தில் ஏற்பட்ட சத்தம்

அவர்கள் நடத்திய விசாரணையில் முதல் தளத்தில் சத்தத்துடன் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காற்று வெடிப்பினால் ஏற்பட்ட சாதாரண விரிசல்தான், பயப்படத் தேவையில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளனர். இருப்பினும்  சத்தத்தை கேட்டு பயந்து ஓடிய பணியாளர்கள் திரும்பவும் பணிக்கு திரும்பவில்லை.

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – சென்னை வானிலை மையம் தகவல்!

தற்போது விரிசலை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் தற்போது இருக்கும் தலைமை செயலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், புதிய கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

தவெக மாநாட்டில் தமிழ்த்தாய்க்கு கட் அவுட் – முழு தகவல் இதோ !

2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள்

பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்

Leave a Comment