பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் திறப்பு – முதல்வர் ஸ்டாலின் தொடக்கம் !

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் திறப்பு, அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். pasumpon muthuramalinga thevar

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. Chief Minister Stalin

மேலும் இந்த குருபூஜை விழாவினை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வர். மேலும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக கூடம் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தற்காலிக கூடம் அமைக்கப்படுவதால் ஆண்டுதோறும் பல்வேறு சிரமம் ஏற்படுகின்றன. அந்த வகையில் தற்காலிக கூடங்களை நிலையானதாக மாற்றி அமைக்கும் வகையில், pasumpon muthuramalinga thevar arangam Chief Minister Stalin Inauguration

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் முன்பு ரூ.1.55 கோடி மதிப்பிட்டில், ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் இருக்கும் வகையில் சுமார் 9.800 சதுர அடியில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்? முழு விவரம் உள்ளே!

மேலும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment