தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை – 2 ஊருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள ஓரிரு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி,கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் ௩ நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ரூ. 438 கோடிக்கு மது விற்பனை – அடேங்கப்பா படத்தோட வசூலை விட அதிகமா இருக்கே!
மேலும் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாவட்டங்களில் இருக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்