தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை மையம் தகவல்!
நவம்பர் 6 வெதர் ரிப்போர்ட் எச்சரிக்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 6 வெதர் ரிப்போர்ட் எச்சரிக்கை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நாளை நவம்பர் 7ஆம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்க இருக்கிறது.
அமெரிக்க தேர்தலில் வெற்றி வாகை சூடிய தமிழர் – அடடே யார் அந்த வெற்றியாளர் தெரியுமா?
தமிழக கடற்கரை ஓரப்பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இன்று முதல் வருகிற நவம்பர் 8ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?