ICAI தேர்வுகள் 2025 தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ICAI தேர்வுகள் 2025 தேதி மாற்றம்: ICAI தேர்வுகள் வருகிற 2025 பொங்கல் திருநாளில் நடைபெற இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. பொங்கல் தினத்தில் நடப்பதால் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக மதுரை எம்பி வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பொங்கல் மட்டுமின்றி, அதே நாளில் சங்கராந்தி உள்பட ஒரு சில பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மாற்று தேர்வு தேதி குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனவரி 14ஆம் தேதி நடக்க இருந்த தேர்வு, தற்போது ஜனவரி 16ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து,  ஜனவரி 12, 16, 18, 20 உள்ளிட்ட தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்று ICAI அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்வர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இது மாதிரி பண்டிகை நாட்களில் இனி தேர்வுகள் நடத்த கூடாது என்று கட்சியினர் கூறி வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சுற்றுலாவுக்கு குறைந்த பட்ஜெட்டில் எங்கே செல்லலாம்? தமிழகத்தில் உள்ள டாப் 3 இடங்கள்!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (27.11.2024) பகுதிகள் – பவர் கட் ஏரியாக்களின் முழு விவரம் !
IPL Auction 2025 – விலை போகாத முக்கிய வீரர்கள் ! அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் – யார் யார் தெரியுமா ?
இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.11.2024) ! மளமளவென குறையும் கோல்ட் ரேட் !
ரேஷன் கடைகளுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு – பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி – சொந்த ஊருக்கு நடையை கட்டிய ஆஸ்திரேலியா அணி!

Leave a Comment