விஜய் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு செய்யும் அஜித்? இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் டாப் 5ல் கொடி கட்டி பறந்து  கொண்டிருப்பவர்கள் தான் தளபதி விஜய் மற்றும் அஜித். விஜய் தன்னுடைய தவெக கட்சிக்கு ஆதரவு செய்யும் விதமாக மறைமுகமாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அதே போல  அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2025 பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதே போல், விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, விஜய் அரசியலில் செல்ல இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அஜித் துபாய் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் அஜித் குமார் பயன்படுத்தும் காரை ஆய்வு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி ரேஸில் பயன்படுத்த போகும் அஜித்தின் கார் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளது.

இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பீர்கள். அவரின் காரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வண்ணம் போன்று உள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது தல அஜித், அரசியலில் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  2026ல் தவெக தலைவர் விஜய் வெற்றி பெறுவாரா என்பதை, பொறுத்து இருந்து பார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

96 படத்தின் பார்ட் 2 ரெடி? விஜய் சேதுபதி திரிஷா காதல் கைகூடுமா?
AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?
சமந்தாவை ஓரம் கட்டினாரா டான்சிங் குயின் ஸ்ரீலீலா – ”ஊ சொல்றியா” vs “கிசிக்” இரண்டில் எது BEST?

Leave a Comment