திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!
Madurai to Trichy: மதுரை – திருச்சி பயண வழித்தடம் மாற்றம்: தென் மாவட்ட மக்கள் அனைவரும் திருச்சி செல்ல வேண்டுமானால் மதுரை மாட்டுத்தாவணி (MGR) பேருந்து நிலையம் தான் வர வேண்டும். அதாவது, இங்கு இருந்து பல வகையான பேருந்துகள் திருச்சிக்கு இயக்கப்படுகிறது.
திருச்சி போக மாட்டுத்தாவணி வேண்டாம் ஆரப்பாளையம் போங்க! மதுரை மக்களே இத கொஞ்சம் கவனிங்க..!
மாட்டுத்தாவணி – திருச்சி:
சென்னை செல்லக்கூடிய SETC மற்றும் அணைத்து வகையான பேருந்துகளும் திருச்சி வழியாகத்தான் செல்லும். அது போக, TNSTC பேருந்துகள் சாதாரண பேருந்து மற்றும் இடைநில்லா (1 to 1) பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.
இதன் முக்கிய வழித்தடமாக மாட்டுத்தாவணி, மேலூர், துவரங்குறிச்சி, விராலிமலை, வழியாக திருச்சி செல்கிறது. மேலும், இதன் தூரம் சுமார் 130 km. பயண நேரம் கிட்டத்தட்ட 2.25 நேரமாக உள்ளது. மேலும் 2 சுங்க சாவடிகளை கடக்க வேண்டியுள்ளது.
WhatsApp Channel | Join Now |
Facebook Page | Join Now |
Telegram Channel | Join Now |
TN Govt Job Portal Link | Click Here |
ஆரப்பாளையம் – திருச்சி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பின்படி, மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பயண நேரம் குறைக்கும் பொருட்டு, இந்த புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஆரப்பாளையத்திலிருந்து நத்தம் வழியாக திருச்சிக்கு தினசரி இயக்கப்படும்.
இந்த பேருந்தின் முக்கிய நிறுத்தங்களாக பின்வரும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரப்பாளையம், செல்லூர், கோரிப்பாளையம், ரிசர்வ் லைன், அயர்பங்களா, என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், நத்தம், துவரங்குறிச்சி, விராலிமலை வழியாக திருச்சி சென்றடைகிறது.
Madurai Power Cut News: தமிழகம் முழுவதும் நாளை மின்தடை (19.05.2025) – மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !!
மேலும், இதன் தூரம் சுமார் 127 km. பயண நேரம் கிட்டத்தட்ட 2.00 நேரமாக உள்ளது. பயண நேரம் மற்றும் தூரத்தை குறைக்கும் வகையில், இந்த புதிய வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மக்களே நாம் இப்போது மாட்டுத்தாவணி (MGR நிலையம்) செல்லவே அரை மணி நேரம் தேவைப்படுகிறது. அதனால் பேருந்தில் செல்பவர்கள் இந்த புதிய வழித்தடத்தை பயன்படுத்துங்கள். இந்த தகவலை இப்போதே உங்களுக்கு தெரிந்த அனைவர்க்கும் ஷேர் செய்யுங்கள்.