கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025. குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் குழந்தை சேவை மையம் 1098 அலகில் காலியாகவுள்ள களப்பணியாளர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு வேலை 2025
களப்பணியாளர் பணியிடத்திற்கு (காலிப்பணியிடம் 1 மற்றும் தொகுப்பூதியம் ரூ. 18,000/-) – விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மற்றும்
குழந்தைகள் நலன்/ சமூக நலன் துறையின் கீழ் பணிஅனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மற்றும் அவசர உதவி எண் மையங்களில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர் கணினி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
மேற்காணும் தகுதியினை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத்தேர்வு வாயிலாக இப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ஆதலால் இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தின் மூலம் (https:/coimbatore.nic.in/) விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகலினை சுயகையொப்பமிட்டு கீழ்கண்ட முகவரிக்கு 25.09.2025 முதல் 10.10.2025
அன்று மாலை 05.45 மணிக்குள் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Important | Links |
---|---|
Official Notification | Click Here |
Application Form | Download |