கடைசியா என்னால பார்க்க முடியாம போச்சே.., கேப்டன் சமாதியில் தேம்பி தேம்பி அழுத சூர்யா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 27ம் தேதி காலை இயற்கை எய்திய நிலையில், சினிமா முதல் அரசியல் வரை பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இப்பொழுது வரை அவர் புதைக்கப்பட்ட இடத்திற்கு தினசரி ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நேரில் வராமல் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்த நிலையில், பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் சூர்யா
கேப்டன் விஜயகாந்த் சூர்யா

இந்நிலையில் நடிகர் சூர்யா விஜயகாந்த்க்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணனின் இழப்பு மிகவும் துயரமானது, பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷூட்டிங்கில் முதல் நாள் என்னை பார்த்ததும் அவரின் அருகில் அமர வைத்து சாப்பிட வைத்தார். அவரை போல் ஒரு மனிதரை தற்போது வரை பார்த்ததில்லை. அவரின் முகத்தை கடைசியாக பார்க்க முடியாமல் போன வலி எனக்கு அதிகமாக இருக்கிறது என்று கண் கலங்கி பேசியுள்ளார்.

Leave a Comment