அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை !

அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு மற்றும் அரசு விரைவு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது. உரிய பயிற்சி பெற்ற அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுகலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது மற்றும் 15 வது ஊதிய ஓப்பந்தம் போன்றவை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நேற்று முதல் போக்குவரத்து தொழிலார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாண்டிச்சேரி JIPMER வேலைவாய்ப்பு 2024 ! ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இதில் குறிப்பாக AITUC , CITU மற்றும் அண்ணா தொழிற்சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

பொங்கல் பண்டிகையை ஒட்டி தொழிலார்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் தற்போது தற்காலிக ஊழியர்களை நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் உரிய பயிற்சி பெற்ற ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுகலாம்.

Leave a Comment