பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி கோவில் அடிவாரத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்? வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் பழனியில் தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தைப்பூசம் தொடங்க இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதற்காக கோவிலில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு விட்ட நிலையில், தொடர்ந்து கடைகளை அகற்றும் பணியில் இருந்து அதிகாரிகள் இருந்து வருகின்றனர். இதனால் வர்த்தகர்கள் சங்கம் பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Leave a Comment