அம்மாடி., ஒருவழியா அப்டேட் வந்துருச்சுப்பா.., “தக் லைஃப்” படத்துல வாரிசு நடிகர் இருக்காரா? அதிகாரப்பூர்வ வீடியோ வெளியீடு!!
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் உலகநாயகன் கமலஹாசன். இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, கல்கி உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து உருவாகி வருகிறது. குறிப்பாக 32 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் கமலுடன் இணைந்து “தக் லைஃப்” என்ற படத்தை எடுக்க இருக்கிறார்.
இதற்கான டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக், திரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் “தக் லைஃப்” படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்குவதாக படக்குழு அதிகாரபூர்வ வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.