விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திடீர் திருமணம்? பொண்ணு யார் தெரியுமா? வெளியான ஷாக் புகைப்படம்!!

சீரியலுக்கு பெயர் போன சன் டிவிக்கு நிகராக விஜய் தொலைக்காட்சியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் தற்போது புதிதாக டெலிகாஸ்ட்டாகி வரும் சீரியல் தான் நீ நான் காதல். இந்தத் தொடர் ஹிந்தியில் பேமஸ் சீரியலான Iss Pyaar ko Kya Naam Doon?ன் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் நபர்கள் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள்.

இதனால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் இந்த தொடர் ஒரு காதல் கதையை மைய படுத்தி எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீ நான் காதல் சீரியலில் ஹீரோவாக நடிக்கும்  பிரேம் ஜேகப் என்பவருக்கு சமீபத்தில் ஸ்வஸ்திகா என்பவருடன் பிரம்மாண்டமாக  திருமணம் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சின்னத்திரை பிரபலங்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 

அடக்கடவுளே.., திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை., கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்? பின்னணி என்ன?

Leave a Comment