5-வது ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த KPY பாலா .. அவருக்கு பின்னாடி இருந்து உதவுவது யார் தெரியுமா? அவரே சொன்ன நச் பதில்!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் நுழைந்து, தற்போது திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர் தான் பாலா. அவர் சினிமாவை தாண்டி அண்மை காலமாக ஏழை எளிய மக்களுக்கு பல விதங்களில் உதவி கரம் நீட்டி வருகிறார். அதன்படி 4 ஆம்புலன்ஸ், நிதி உதவி என தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பாலாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல் தற்போது வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு 5வதாக ஒரு ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாலா கூறியதாவது, இந்த கிராமத்தில் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட இல்லை என்று கேள்வி பட்டேன்.

அதுமட்டுமின்றி ஒரு தடவை கர்ப்பிணி பெண்ணை டோலி கயிற்றில் கட்டி கீழே இறக்கிய சம்பவத்தை பார்த்தேன். அதனால் தான் இந்த கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸை வழங்கியுள்ளேன். எனக்கு ஆறுதலாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. மேலும் எனக்கு பின்னாடி யாரோ உதவியாக இருக்கிறார் என்றும் அவர்கள் சொல்லி தான் இந்த மாதிரி செய்கிறேன் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆமாம் அது உண்மைதான். என் பின்னால் இருப்பவர்கள் அவமானம், கஷ்டம் ஆகியவை தான் என்று கூறியுள்ளார். 

அடக்கடவுளே., சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நிற்க கூட முடியாமல் தள்ளாடிய பரிதாபம்.., சோகத்தில் ரசிகர்கள்!!

Leave a Comment