பேருந்து நிறுத்த போராட்டம்?., போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்துடன் 3வது முறை பேச்சுவார்த்தை!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தமிழக அரசு செவி சாய்க்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் நிறைய பண்டிகை நாட்கள் வரவிருக்கும் நிலையில், பேருந்து நிறுத்த போராட்டத்தால் மக்கள் அல்லோலப்படுவார்கள் என்ற காரணத்தால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நீதிமன்றம் பேருந்து தொழிலாளர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,  போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த பேச்சு வார்த்தையில்  ஊதிய உயர்வு , அகவிலைப்படி நிலுவை தொடர்பாக  பேசப்பட இருக்கிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் 27 சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

தளபதியை தொடர்ந்து அரசியலில் குதித்த முக்கிய நடிகர்.., யாருன்னு தெரியுமா?.., இத யாரும் எதிர்பாரக்கலயே!!

Leave a Comment