ஆஹா.., முன்னணி நடிகையுடன் லோகேஷ் கனகராஜ்.., வெளியான ஷாக்கிங் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இயக்கத்தை தாண்டி, நடிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது உலக நாயகன் மகளான ஸ்ருதிஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடிக்க இருக்கிறாராம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதற்கான பார்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஸ்ருதிஹாசன் பாடல் எழுதிய நிலையில், லோகேஷ் கனகராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த பாடலை கேட்ட லோகேஷ் நடிக்க சம்மதித்து படப்பிடிப்புக்கும் தயாரானார். இனிமேல் டெல்லுலு இஸ் த நியூ சொல்லுலு’வின் என அதன் வரிகளை அறிவித்துள்ளனர். மேலும் இந்த பாடல் காதலர் தினத்தன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.