என் மார்பகம் பெருசா இருக்க., இதான் காரணம்?.., கமெண்ட் செய்தவருக்கு நெத்தியடி பதிலை கொடுத்த “எதிர்நீச்சல்” சீரியல் நடிகை!!
தமிழ் சினிமாவில் அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. ஆனால் அந்த படத்தில் இருந்து அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 2008ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை கல்யாணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி கேரளாவில் செட்டில் ஆனார். அதன் பின்னர் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர், தற்போது சன் டிவியின் பேமஸ் சீரியலான “எதிர் நீச்சல்” தொடரில் ஈஸ்வரி ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் பதிவுக்கு வரும் கமெண்ட் குறித்து பேசியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் அவர், நான் போடும் போட்டோ பதிவுகளுக்கு என்னுடைய மார்பகம் பெருசா இருக்க காரணம் என்பது குறித்து தான். கமெண்ட் செய்யும் நபர்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு என்ன இருக்கிறதோ அதே தான் என்னிடமும் இருக்கிறது. கல்யாணமான பெண் தாய்மை அடைந்த பிறகு, அவர்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பகம் பெரிதாக தான் இருக்கும், அதனால் தான் என்னோட மார்பகமும் பெரிதாக இருக்கிறது என்று ஓப்பனாக பேசியுள்ளார். மேலும் இது போல் கமெண்ட் செய்யும் நபர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.