நடுராத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை..,சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

திரைத்துறையில் நடிகை, பின்னணி பாடகி என ரவுண்டு கட்டி பிசியாக இருந்து வந்தவர் தான் மல்லிகா ராஜ்புத் (எ) விஜயலட்சுமி. இவர் கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த 2014 ல் வெளியான ‘ரிவால்வர் ராணி’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் சினிமா ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அரசியலில் குதித்து ஒரு கை பார்த்து வந்தார்.

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து, வெறும் 2 வருடங்களில் கட்சியை விட்டு விலகிய அவர் 2022 ல் பாரதிய சவர்ண சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, இது கொலையா ? தற்கொலையா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் இறப்பிற்கு பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

ஒரு மகன் இறந்தாலும்.,  எனக்கு IAS படிச்ச மகன்கள், மகள்கள் நிறைய பேர் இருக்காங்க – சைதை துரைசாமி கண்ணீர் உருக்கம்!

Leave a Comment