மார்க்கெட்  இல்லாமய விஜய் அரசியலுக்கு வந்தாரு?.., இல்ல இது தான் காரணமா?.., ஒய்.ஜி.மகேந்திரன் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். இப்பொழுது இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மூத்த நடிகர் ஒய் ஜி மகேந்திரன் விஜய் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். அதில், ” மக்களுக்கு உதவி செய்ய நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். அப்படி தான் தம்பி விஜய் வந்திருக்கிறார்.

அவரின் வருகையை நான் வாழ்த்துகிறேன். அவர் தற்போது பீக்கில் இருந்து வரும் நடிகர், 200 கோடி சம்பளம் வாங்கும் அவர் அதெல்லாம் விட்டுட்டு வருகிறார் என்றால், அவருக்கு பணத்தாசை கிடையாது. அவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் அரசியலுக்கு வரல, நல்லா சம்பாதிச்சிட்டிருக்கும்போதே கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனால் அரசியலில் பணம் சம்பாதிக்க அவர் நினைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுகிறார் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறியுள்ளார். 

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் இந்த கவர்ச்சி நடிகையை ஞாபகம் இருக்கா?.., இப்ப எப்படி இருக்கார் தெரியுமா?.., புகைப்படம் உள்ளே!!!

Leave a Comment