பழனி பக்தர்களே.., இனி தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருந்து வரும் பழனி மலைக்கு தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில் அடிவாரத்தில் உள்ள கடைகளை அரசு அப்புறப்படுத்திய நிலையில் பெரும் போராட்டம் நிலவியது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை கிளை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனிமேல் பழனி கிரிவல பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளது.

அதுமட்டுமின்றி திருப்பதி போல் பழனியிலும் கிரிவலத்தில் மின்சார வாகனங்கள் இயங்க பக்தர்களுக்காக இயங்க வேண்டும். மேலும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் பாதையை மக்கள் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று  மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு நாட்களாக பிணமாக கிடந்த பிரபல இயக்குனர்.., கொலையா? தற்கொலையா?.., போலீஸ் தீவிர விசாரணை!!

Leave a Comment