மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?.., தளபதி 69 பட புதிய அப்டேட் வெளியீடு.., இது என்னடா புது உருட்டா இருக்கு!!!
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது “கோட்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய புதிய கட்சியினை தொடங்கிய விஜய் அதற்கு அதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிட்டு சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். கூடவே தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்திருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கி இருந்தாலும் அடுத்த இரண்டு படங்களை கொண்டாட வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது ஒரு பக்கம் இறுக்கம் இன்னொரு பக்கம் தளபதி 69 படத்தை யார் இயக்க போகிறார் என்று கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. முதலில் அந்த படத்தை அட்லீ இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில் அடுத்து கார்த்திக் சுப்புராஜ், அப்புறம் வெற்றி மாறன், நெல்சன், சங்கர் என அடுத்தடுத்து கூறி வந்த நிலையில், தற்போது இந்த லிஸ்ட்டில் இன்னொரு இயக்குனரும் இணைந்துள்ளார்.
அதாவது சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தை இயக்கிய திரிவிக்ரம் தான் தளபதி 69 படத்தை இயக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்கலாம் விஜய் யாருக்கு தான் வாய்ப்பு கொடுக்கிறார் என்று.