அமிர்தாவுக்கு தாலி கெட்ட பார்க்கும் கணேஷ்., திக்குமுக்காடிப்போன எழில்.., பரபரப்பான கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியல்!!

பாக்கியலட்சுமி சீரியல்

தற்போது விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி  வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் கணவனை இழந்து வாழ்ந்து கொண்டிருந்த அமிர்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் எழில். இப்படி இருக்கையில் அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் உயிரோடு வந்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் கணேஷின் தந்தைக்கு உடம்பு முடியவில்லை என்று கூறி அமிர்தா மற்றும் குழந்தையையும் கடத்தி விடுகிறார்.

இதனால் அமிர்தாவை அழைத்து என்ற பாக்கியலட்சுமி-யை குடும்பம் திட்டி தீர்த்த நிலையில், தற்போது அதிர்ச்சி ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்  கணேஷ் கையில் ஒரு தாலியை வைத்து கொண்டு அமிர்தா கழுத்தில் கட்ட பார்க்கிறார். அமிர்தா கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் எழிலை கொலை செய்து விடுவேன் என்று கணேஷ் மிரட்டும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமிர்தா என்ன முடிவு எடுக்க போகிறார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

மாணவர்களே குட் நியூஸ்.., இனி 6 மணி நேரம் தான் பள்ளிக்கூடம் இயங்கும் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

Leave a Comment