பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை.., கடும் பீதியில் பொதுமக்கள்!!
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் செயல் இழந்த நிலையில், அது பூமியில் விழ வாய்ப்பு இருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
செயற்கைகோள் செயலிழப்பு
விண்வெளியில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டில் உள்ள விண்வெளி வல்லுநர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட வானிலையை வேகமாக கணிக்கும் செயற்கைக்கோளை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களிடம் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 1990-ம் ஆண்டு ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ‘கிராண்ட் பாதர்” என்ற செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்தது. கிட்டத்தட்ட அந்த செயற்கை கோளை அனுப்பி 34 வருடங்கள் கடந்த நிலையில் சுற்றுப் பாதையை விட்டு விலகி சேதம் அடைந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதனுடைய பாதி பூமியில் விழுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செயற்கை கோளை கட்டுப்படுத்தி கடலில் விழ வைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படி விழும் பொழுது அதன் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் சில பாகங்கள் பூமியில் விழ அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் பூமியில் விழலாம் என்றும், கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் எங்கு விழும் என்று சொல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று பீதியில் இருந்து வருகின்றனர்.