தலைமை செயலகத்தில் பாம் வெடிக்கும்?.., போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்?.., களத்தில் இறங்கிய காவல்துறை!!

தலைமை செயலகத்தில் வெடிகுண்டு

சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெற்றோர்களுக்கு SMS மூலம் வந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சரியாக காலை 7.30 மணி அளவில் செல்போன் மூலமாக தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க, உடனே வெடிகுண்டு நிபுணர்கள் தலைமை செயலகத்தில் ஒரு இடம் விடாமல் மோப்ப நாய்களை வைத்து தேடி வந்தனர். அதன்படி பாம் எங்கயாவது இருக்கிறதா என்று சோதனை கருவி மூலம் அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் உண்மையா? அல்லது வதந்தியா? என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இப்படி முதல்வர் பிறந்த நாளன்று நடந்த இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

Leave a Comment