நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி – வருத்தத்தில் சினிமா ரசிகர்கள்!!

Bollywood News: நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அக்‌ஷய் குமார். மேலும் இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.o படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இவர், தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று” படத்தின் இந்தி ரீமேக் படமாக “சர்ஃபியா” உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் கிடைத்த அதே வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைத்து வருகிறது. விரைவில் இப்படம் 100 கோடி வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Also Read: சன் டிவியில் புதிதாக உருவாக போகும் சீரியல் – விஜயகாந்தின் சூப்பர் ஹிட்  பட பெயரில்!!

அதாவது நடிகர் அக்‌ஷய் குமாருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது தனிமை படுத்தி உள்ளார் என்றும், அதனால் தான் அவர் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். 

Leave a Comment