கல்யாணத்துக்கு தேதி குறிச்சாச்சு.., ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா பட நடிகை – மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
திரைத்துறையில் வந்த வேகத்தில் காணாமல் போன நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகை மீரா சோப்ரா. இவர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு மருதமலை, லீ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த அவருக்கு 40 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த செய்தி குறித்து மீரா சோப்ரா பேசியுள்ளார். அதில் அவர், ஆமாம், எனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. வருகிற மார்ச் மாதம் தான். தேதி கொடை குறிச்சாச்சு.
சோசியல் மீடியாவில் வெளிவந்த தகவல் உண்மை தான் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் கட்டிக்க போகும் மாப்பிள்ளை யார் என்பது குறித்து மட்டும் அவர் வாயை திறக்க வில்லை. மேலும் அவர் கட்டிக்க போகும் நபர் யார் என்று ரசிகர்கள் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது.