நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் இருந்த மர்மம்.., வசமாக சிக்கிய பெண் யூடியூபர் – சிபிஐ வழக்கு பதிவு செய்து அதிரடி!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் துபாயில் பிரபல ஹோட்டல் ஒன்றில் குளியலறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பின்னிட்டி என்பவர் தனது யூடியூப் சேனலில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதாவது, இரண்டு அரசாங்கமும் அவரின் மரணத்தில் உள்ள மர்மங்களை பூசி முழுங்க பார்க்கிறார்கள். தான் நடத்திய விசாரணையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எழுதியதாக ஒரு சில கடிதங்கள் மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரக ஆவணங்கள், சுப்ரீம் கோர்ட்டு ஆவணங்கள், அனைத்தையும் வெளியிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அலுவலகத்துக்கு சாந்தினி ஷா என்ற வக்கீல் புகார் கொடுத்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து பின்னிட்டி வெளியிட்ட எல்லா ஆவணங்களும் போலியானவை என்று சி.பி.ஐ கண்டுபிடித்த நிலையில், அவர் மீதும் வழக்கறிஞர் மீதும் வழக்கு பதிவு செய்தது. மேலும் இது குறித்து பேசிய பின்னிட்டி, என்னுடைய தரப்பு அறிக்கை எதையுமே சிபிஐ பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.