ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம் ! பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – பிஜு பட்நாயக் விமான நிலையத்தின் இயக்குனர் பிரதான் தகவல் !

ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கம். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 170 பயணிகளை ஏற்றிக்கொண்டு விஸ்தாரா விமானம் இன்று மதியம் 1.45 மணிக்கு டெல்லி நோக்கி புறப்பட்டது. அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது.

ஆலங்கட்டி மழை காரணமாக விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விமானி உடனடியாக தரைகட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

5 லட்சம் கோடி மதிப்பிலான ஹெராயின் காணவில்லை ! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிக்கையாளர் ! மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு !

அத்துடன் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை வேறு விமானத்தில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் பிஜு பட்நாயக் விமான நிலையத்தின் இயக்குனர் பிரதான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment