தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர் – முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

2024 தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்: பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பொருட்களின் ஒன்றாக இருந்து வருவது சமையல் எரிவாயு. தற்போது சமையல் எரிவாயு விலை அதிகமாக இருந்து வருவதால் மக்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் ஒரு சில மாநிலங்களில் அரசு சிலிண்டர் இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பரப்புரையின் போது பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

2024 தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்

இந்நிலையில் அதற்கான அறிவிப்பை தான் தற்போது வெளியிட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு  3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கும் திட்டம் வருகிற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2025 ஏப்ரல் முதல் சென்னையில் மின்சார பேருந்துகள் – அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

எனவே 4 மாதங்களுக்கு ஒருமுறை இல்லத்தரசிகளுக்கு  கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் மாநில அரசுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ.2,700 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு 

2026 காமன்வெல்த் போட்டி 

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்

Leave a Comment