அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் – 51 நாட்களுக்குப் பின் அதிரடி உத்தரவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து திகார் ஜெயிலில் அவர் இருந்து வந்த நிலையில், அரசை வழிநடத்தி வந்தார். இருப்பினும் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  இடைக்கால  ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு தள்ளுபடி செய்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதாவது மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில்,  ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் வருகிற ஜூன் 2-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

 தமிழ்நாட்டில் வைகை ஆற்றில் நீர் திறப்பு – 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Leave a Comment