போக்குவரத்து நெரிசலை குறைக்க கடலுக்கு நடுவே பாலம்.., அதிரடியாக திறந்து வைத்த பிரதமர் மோடி!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்ட நாட்டின் மிக நீண்ட “அடல் சேது” பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் மும்பை மற்றும் நவி மும்பைக்கு இடையேயான பயண தூரத்தை 2 மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக நகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனால் போக்குவரத்திற்காக அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கிறது. இதனை போக்கும் வகையில் கடலுக்கு நடுவில் மிக நீண்ட அடல் சேது என்ற பாலம் திறக்கப்பட்டது. இதனால் பயண நேரம் குறைக்கப்பட்டு போக வேண்டிய இடத்திற்கு விரைவில் சென்று விடலாம்.

பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த இந்தியாவின் மிக நீண்ட கடல் பாலத்தை பற்றிய சில குறிப்புகள்

  •  “அடல் சேது”  பாலமானது ரூ.17,840 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில்  “அடல் சேது” 12 வது மிகப்பெரிய கடல் பாலமாகும்.
  • 22 கிலோமீட்டர் நீள அடல் சேதுவுக்கு 2016 ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • “அடல் சேது”  கடலில் 16.50  கிலோமீட்டர் நிலத்தில் 5.50 கிலோமீட்டர் தூரம் கொண்டது.
  • மும்பை – நவி மும்பை இடையேயான பணய தூரத்தை 2 மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களாக குறைக்கும்.

Leave a Comment