Home » பொது » bigg boss tamil 7 wild card contestants இவங்க தான் ! அடடா இவருமா ! 

bigg boss tamil 7 wild card contestants இவங்க தான் ! அடடா இவருமா ! 

bigg boss tamil 7 wild card contestants

  bigg boss tamil 7 wild card contestants. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஐந்து பேர்கள் இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரியாக வர உள்ளனர் என்று கடந்த ப்ரோமோவில் கமல் கூறி இருந்தார். அதன் படி இந்த ஐந்து பேர்கள் தான் பிக் பாஸ் வர இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.  

bigg boss tamil 7 wild card contestants இவங்க தான் ! அடடா இவருமா ! 

bigg boss tamil 7 wild card contestants

எதிர்பார்த்த TRB இல்லை :

  விஜய் தொலைக்காட்சியில் கடந்த 1ம் தேதியில் இருந்து தினமும் இரவு 9.30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அனன்யா , விஜய் வர்மா மற்றும் பவா செல்லதுரை மூவரும் போட்டியில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போது பூர்ணிமா , கூல் சுரேஷ் , பிரதீப் , சரவண விக்ரம் , விசித்ரா , விஷ்ணு , மணி , ரவீனா , பிரதீப் , நிக்சன் , ஐஸ்வர்யா , மாயா , வினுஷா , அக்ஷயா , யுகேந்திரன் என 15 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். 

JOIN SKSPREAD WHATSAPP CHANNEL

  இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு TRB இல்லை என்று ஒரு புறம் சொல்லப்பட்டாலும் போட்டியாளர்கள் மத்தியில் பொழுது போக்கு குறைவாக இருக்கின்றது. இந்நேரத்தில் தான் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும்.

 5 வைல்டு கார்டு என்ட்ரி :

  பிக் பாஸ் நிகழ்ச்சியில்  வைல்டு கார்டு என்ட்ரி கடந்த சீசன்களில் 1 நபர் அல்லது 2 நபர்கள் கலந்து கொள்வர். ஆனால் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பதற்கு ஏற்ப 5 நபர்கள்  வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்கு வர இருக்கின்றனர். உள்ளே வரும் 5 நபர்களுக்கு மக்களின் கருத்துக்களும் தெரியும் போட்டியாளர்களின் மன நிலையும் தெரியும் என்று கமல் சொல்லுவதை போன்று விஜய் டிவியில் ப்ரோமோ வெளியாகியது. ப்ரோமோ வெளியாகியதில் இருந்து பிக் பாஸ் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. bigg boss tamil 7 wild card contestants

இவர்கள் தான் :

  1. VJ அர்ச்சனா 

  2. கானா பாலா 

  3. பிரவீனா மாயா 

  4. அன்ன பாரதி 

  5. பப்லு பிரித்வி ராஜ் இவர்கள் ஐந்து பேர்கள் தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வர இருக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

1. VJ அர்ச்சனா :

    விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி சீசன் 2 சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்தவர்.

இந்த வார சீரியல் TRP 2023 ! லிஸ்டில் பாண்டியன் ஸ்டார் தான் முதலிடம் … அப்போ எதிர்நீச்சல் !

2. கானா பாலா :

    சினிமா துறையில் பாடல் ஆசிரியராகவும் , பின்னணி பாடகராகவும் இருக்கின்றார். அட்டகத்தி திரைப்படத்தின் ‘ ஆடிப்போன ஆவணி மற்றும் நடுக்கடலுல கப்பல் ‘ போன்ற பாடல்களின் மூலம் பிரபலம் ஆனவர்.

3. பிரவீனா மாயா :

    கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நமீதா மாறி முத்துவின் வளர்ப்பு மகள் பிரவீனா மாயா கலந்து கொள்ள இருக்கின்றார்.

4. அன்ன பாரதி :

     மதுரை முத்துவின் பட்டிமன்ற பேச்சளராக இருந்தவர் அன்ன பாரதி. மேலும் சமூக வலைத்தளம் , தொலைக்காட்சிகளில் பிரபலம் ஆனவர். இவரும் இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வர இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

5. பப்லு பிரித்வி ராஜ் :

     பப்லு பிரித்வி ராஜ் திரைப்பட மற்றும் சீரியல் நடிகர். சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் ஆனவர். 

தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறு விறுப்பாக இருந்தாலும் எப்போதும் இல்லாமல் இந்த முறை 5 வைல்டு கார்டு என்ட்ரி இருப்பது எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. வரும் அக்டோபர் 29ம் தேதி நிகழ்ச்சி மூன்று மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கின்றது. இதில் டுவிஸ்டுகள் இருக்கலாம். பொறுத்திருந்து பார்க்கலாம் யார் அந்த 5 பேர்கள் என்று. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top