பொதுக்கூட்டம்.., நடைபயணம் என இருந்த தமிழ்நாட்டில் ! பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம் – இது வாக்காக மாறுமா ?
பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாஜகவின் புது வகை பிரச்சாரம் :
மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை நடக்காத புதுவகை பிரச்சார யுக்தியை பாஜக கையாண்டு வருகிறது. அதன் படி பாஜக தலைவர்கள் வட இந்தியாவில் நடத்துவது போல பிரமாண்ட வாகனப்பேரணியை தமிழகத்தில் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெருங்கும் மக்களவைத் தேர்தல்: திடீரென மாறிய சீமான் சின்னம் – தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!
இதுவரை அண்ணா, MGR, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் வைகோ போன்ற தலைவர்கள் வரை தேர்தல் நேரத்தில் பொதுக்கூட்டம், நடைபயணம் போன்றவற்றை பார்த்த தமிழகத்தில் தற்போது பாஜக நடத்தும் வாகனப்பேரணியானது மக்களிடத்தில் வாக்குகளை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.