CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு ! உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா சான்றிதழை வழங்கினார் !

CAA சட்டத்தின் மூலம் 14 பேருக்கு குடியுரிமை அறிவிப்பு. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் ஒரு சட்டமாகும். அந்த வகையில் அண்டை நாடுகளில் துப்புறுத்தப்படும் சிறுபான்மைமக்களான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்தின் மூலம் இலங்கை உள்ள தமிழர்கள் பயனடைய முடியாது என்பதால் இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியாவில் CAA குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் 14 பேருக்கு உள்துறை அமைச்சகம் இந்தியக்குடியுரிமை வழங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் அகதிகளாக வசித்துக்கொண்டிருக்கும் 14 பேருக்கு உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கினார்.

தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு ஏழு நாட்கள் தடை ! வனத்துறை அறிவிப்பு

CCA சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், தற்போது முதல்முறையாக CAA சட்டத்தின் கீழ் தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment