செக் மோசடி வழக்கு.., நீதிமன்றத்தில் ஆஜரான பவர் ஸ்டார்.., அதிரடி உத்தரவை வழங்கிய நீதிபதி!!
பவர் ஸ்டார் சீனிவாசன்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்ற படத்தின் மூலம் பவர் ஸ்டார் என்று பெயர் வாங்கியவர் தான் நடிகர் சீனிவாசன். காமெடி நடிகராக இருந்த இவர் தற்போது எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முனியசாமி என்ற நபர் இறால் பண்ணை வைத்து நடத்தி வரும் நிலையில், அவரின் தொழிலை மேம்படுத்துவதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கித் தருவதாக பவர் ஸ்டார் கூறியுள்ளார். மேலும் அதற்கான வேலைகளை செய்ய 14 லட்சம் செலவாகும் என, பவர் ஸ்டார் கூறி வாங்கியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதையடுத்து ஒரு போலியான செக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த 14 லட்சத்தையும் திருப்பி தராமல் இருந்ததால் அவர் மீது செக் பண மோசடி வழக்கு தொடரப்பட்டது. மேலும் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையில் பவர் ஸ்டார் ஆஜராகாத நிலையில், பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகியுள்ளார்.