சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024 ! மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அறிவிப்பு – அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம் !

சென்னை ஐகோர்ட்க்கு கோடை விடுமுறை 2024. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை ஐகோர்ட்டுகளுக்கு வரும் மே 1 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் அதனை விசாரிப்பதற்கு வசதியாக விடுமுறை கால நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகிய இரு உயர் நீதிமன்றங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

அத்துடன் விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும், திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை ஆகிய நாட்களில் தாக்கல் செய்யலாம் என அறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

Leave a Comment