ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் ! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் குளிர் சீதோஷண நிலையில் உள்ள இடங்களுக்கு மக்கள் படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இ – பாஸ் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 7 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்வோருக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! எந்த நாளில் தெரியுமா ? – தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு !

இ-பாஸ் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் வாசிகளுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

இ-பாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *